வேண்டாமே

அந்தந்த நேரத்தில் தோன்றும் உணர்வுகளை பதிவு செய்வதற்காகவே இந்த பிளாக். சனநாயக பண்பிற்காக மட்டுமே பின்னூட்ட பெட்டியை திறந்து வைத்திருக்கிறேன் மற்றபடி பின்னூட்டங்களை நான் கண்டுகொள்வதில்லை எனவே உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்கவேண்டாமே! பதிவுகள் பிடித்தால் மறுபடியும் வாருங்கள் இல்லையேல் குப்பை என்று என்று ஒதுக்கி அடுத்த பிளாக்கைப் பாருங்கள். உலகம் பெரியது. For some posts, no comments.


Tuesday, December 25, 2007

ADULTS ONLY-->இரண்டே மடிப்புகளில் sexy யாக T-SHIRT மடிக்கும் கலை.

கற்றுத்தறுபவரும் ஒரு இளம் பெண்ணே..

NOTE:
தன் T-SHIRTயை கழற்றி சொல்லித்தருகிறார்..வீடியோவிற்கு இங்கே கிளிக்குங்க.


http://jollymanamay1.blogspot.com/2007/12/t-shirtfold-within-2-steps.html

நன்றி உள்ளது நாய் மட்டும்தானா??????

இந்த பெண்மணி, காட்டில் இறக்கும் தறுவாயில் அடிப்பட்டு கிடந்த சிங்கத்தை முதலுதவி மற்றும் சிகிச்சை அளித்து காப்பாற்றினார்.
சில மாதங்களுக்குப் பிறகு சிங்கத்தை பார்க்க zoo விற்கு சென்றார்.

சிங்கம் தன் நன்றியை வெளிப்படுத்திய விதத்தைதான் இங்கே பார்க்கிறீர்கள்..

Sunday, December 23, 2007

ராமேஸ்வரம்

பில்லா மாதிரியான குப்பைக்கதைகளுக்கு நடுவே இயல்பான உணர்வுகளை இயல்பாக படமாக்கி வெளியாகியிருக்கும் படம்.

நாயகன் "தன்னைத் தொலைத்தவன் நானே மண்ணை   பெறும் வரை காத்திருப்பேன""


நாயகி:"உன்னை தொலைத்து விட்டாலே   இங்கொரு அகதியாய் நானே"பாடல் வரிகள் நிசத்தை பிரதிபலிக்கிறது. ஆங்காங்கே ஆங்கில வசனங்கள் வருவதை தவிர்த்திருக்கலாம். மற்றபடி சினிமா என்னும் சக்தி வாய்ந்த ஊடகத்தின் வழியே இலங்கை உறவுகளை ம்றுபடியும் தமிழகத்தில் நினைவுபடுத்த முயன்றிருக்கும் தயாரிப்பாளருக்கும் இயுக்குனருக்கும் பாராட்டுகள், ஒரு தமிழன் என்கிற முறையில். சினிமா விமர்சனத்திற்காக இந்த பதிவை எழுதவில்லை. குப்பை படங்களுக்கு வலையுலகில் கிடைக்கும் விளம்பரம் நல்ல படங்களுக்கு கிடைப்பதில்லை என்கிற ஆதங்கத்தில் எழுந்த சிறு பதிவுதான் இது.


Saturday, December 15, 2007

என்று தனியும் எங்களின் ஏக்கங்கள்

நண்பர் ஒசை செல்லா , உங்களுக்கான பதிலை எழுதிவிட்டுப்பார்த்தால் அது மிக நீளமாகி விட்டது எனவே பதிவாகவே போட்டுவிட்டேன். இதில் உங்களுக்கான பதில் முதல் பத்தியிலேயே முடிந்து விட்டது மற்றவைகள் என் ஆதங்கங்களே தவிர உங்களை நோக்கி எழுப்பப்பட்ட கேள்விகள் அல்ல.

///OSAI Chella said... Dear Dharan.. fun apart... I saw it in todays new papers. Yesterday Ramdoss took media ppl to the place and shown them what is there and they interviewd the ones who sold their property to the Trust. They all said.. "ithu Kalar Nilam.. oru mannum vilaiyaathu". Also the encroachment theory also proved a hoax. So think twice!///

ராமதாஸே ஒத்துக் கொண்டிருக்கிறார் .ஒரு குறிப்பிட பகுதியில் விளைநிலமும் மற்றும் அரசு புறம்போக்கு நிலமும் இருந்ததாக. நிலத்தை விற்று காசு வாங்கியவர் ராமதாஸை எதிர்த்து கருத்து சொல்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.அவருடைய நிலம் NH-45 ல் தொழிற்பேடு என்கிற ஊருக்கு அருகில் வரும்..1995 முதல் 1999 வரை தினமும் கல்லூரிக்கு NH-45 வழியாகத்தான் சென்று வந்தோம் ,ஆகையால் ராமதாஸ் மற்றும் வீராசாமி சொல்லித்தான் எங்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்று இல்லை.கடலூரில் 1200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தியது ஏன் என்கிற விளக்கம் வேண்டி ராமதாஸ் போராடுவேயாரானல் அதை ஆதரிபதில் எந்த தயக்கமும் இல்லை அதை விடுத்து வளர்சித்திட்டங்களுக்கு விவசாய நிலம் என்கிற காரணம் கூறி தடை ஏற்படுத்துவேயாரானால் கடும் எதிர்ப்பை அவர் சந்திப்பார்.
என்னமோ இந்தியா விவசாய நாடா இருந்தப்போ எல்லா விவசாயிகளும் BMW கார்ல போனமாதிரியும் இப்போதுதான் எலிக்கரி சாப்பிடுகிற மாதிரியும் பேசுவது வியப்பு!!!
குடிக்கும் தண்ணீருக்கே தட்டுப்பாடு பிறகு எங்கே விவசாயம்..இந்தியாவின் தேசிய ஒருமைப்பாடு பக்கத்து மாநிலம் கூட தண்ணீர் தர மறுக்கிறது.. பிறகெங்கே விவசாயம்..இன்றைய சூழ்நிலையில் ஒரு விவசாயின் பொருளாதார சக்தியை விவசாயதின் வழியாக மேம்படுத்த வழிகள் மிக குறைவே எனவே வேறு வழிகளில் அவனுடைய பொருளாதாரத்தை உயர்த வழி பாருங்கள். எத்தனை விவசாயிகளின் பிள்ளைகள் விவசாயத்தை தொடர்கிறார்கள்???? எந்த ஒரு விவசாயியும் தன் மகம் தன்னை போலவே விவசாயம் பார்க்க வேண்டும் என்று நினைப்பது மிகக்குறைவே..தன் மகனுக்கு படிப்ப வரவில்லை என்றால் அவன் சொல்லும் வார்த்தை..., உன்னையாவது படிக்க வைச்சு நல்ல வேலைக்கு அனுப்பலாம்னு பார்த்தா, நீ படிக்கிற லட்சனைத்தைப் பார்த்தா என்னை மாதிரியே காட்லயும் ,நிலத்துலேயும் கஷ்டப்படுவே போல இருக்கு, என்று தான் செய்யும் தொழிலின் மீது இருக்கும் வெறுப்பு வெளிப்படும்..
வேண்டுமானால் குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்து விவசாயத்தை வாழ வையுங்கள்..
விவசாயம் பார்கிறவன் ஊருக்கு சாப்பாடு போடனும் என்கிற பொது நலத்துக்காகவா விவசாயம் பண்றாண், இல்லை, தன் பொருளாதார வளர்ச்சிக்கான் தொழிலாகத்தான் விவசாயத்தைப் பார்க்கிறான். ஆகவே விவசாயநிலத்தை கையகப்படுத்த கூடாது என்கிற வாதத்தை நான் மட்டுமல்ல பெரும்பாலானவர்கள் ஆதரிப்பதில்லை. முதாளளீத்துவம் வளரும் என்கிற கருத்துகளிலேல்லாம் எனக்கு உடன்பாடு கிடையாது. பார்வையறவனிடம் பிக்காசோ ஒவியம் இருப்பதை விட அதை ஏலத்தில் விட்டு வரும் பணத்தில் அவனுக்க பார்வை வரும் வழியை பார்பது மேல் என்கிற கருத்தை உடையவன் நான்..கம்யுனிசம் ஏழை பணக்காரன் என்கிற வேறுபாடு இருக்கக் கூடாது என்கிறது..நான் ஏழைகளே இருக்க கூடாது அனைவரும் பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன்..எத்தனையோ europea நாடுகளிம் கம்யுனிசம் இல்லை அதற்காக அந்த நாடுகள் என்ன பிச்சையா எடுத்துக் கொண்டிருக்கின்றன?? ஆகையால் விவசாயம் என்கிற ஒரு தொழிலை காரணம் காட்டி நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை தடுக்காதீர்கள் என்பதே என் ஆதங்கம். வெளிநாட்டுக்காரன் invest செய்தால், நாட்டை மறுபடியும் காலனி ஆக்குகிறார்கள் என்கிற கூப்பாடு..சரி உள்நாட்டிக்காரன் invest செய்தால் முதளாளித்துவம் வளர்கிறது என்கிற கூப்பாடு..
சரி ராமதாஸ் விசயத்திற்கு வருவோம்,99% சதவீதம் சரி 1% சதவீதம்தான் தவறு என்று ஒரு விசயம் ஒத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று ராமதாஸ் சொல்வாரானால் என்னால் ஒத்துக்கொள்ள முடியாது.
100% சதவீதம் முழுமை பெற்றால்தான் சரி..அதை விடுத்து 99.99% சரி எனவே ஒத்துக்கொள்ளுங்கள் என்று சொல்வதை ஏற்க முடியாது. இந்தியாவின் வளர்ச்சி தாமதமாவதற்கு காரணமே இது மாதிரியான் 100% சதவீத முழமை பெறாமல் செய்யப்படும் காரியங்களூம் அதன் காரணகர்தாக்களும் தான்.
ஒரு அரசியல்வாதியை தேர்ந்தெடுக்கும் போதும் நாம் பார்ப்பது குறைந்தப்பட்ச நேர்மைதான் ,அதாவது atleast 50% சதவீதம் நல்லவனாய் இருந்தால் போதும் என்கிற மனப்பான்மைதான் இந்த தேசத்தை இன்னும் பிச்சைக்கார நாடாகவே வைத்திருக்கிறது. உடனே சில பேர் சொல்லுவார்கள் அரசியல்வாதிகளில் நல்லவர்களே இல்லை என்று, காமராசர் ஒரு நல்ல அரசியல்வாதிதான்,பிறகு ஏன் இந்த மக்கள் தோற்கடித்தார்கள்..தரம் கெட்ட அரசியல்வாதிகளை வளர்த்து விட்டது யார் குற்றம்? தன்னையும் தன் நாட்டையும் ஆள்கிறவனை தேர்ந்தேடுக்க சோம்பேரித்தனம் காட்டும் பல படித்த முட்டாள்களின் குற்றமே.படித்தவன் அரசியல் பேசுவதே இல்லை ஏனென்றால் அரசியல் பேசினால் பாமரன் என்கிற நினைப்பு. எனக்கு பலமுறை annony ஆக comment வரும்..என்னங்க தரன்,படிச்சவங்க நீங்க ,நீங்க அரசியல் கட்சிகளைப் பற்றி எழுதி ஏன் பாமரத்தனமாக வெளிப்படுகிறீர்கள் என்று. அதற்கு நான் கூறும் ஒரே பதில்..
என் நாட்டை ஆள்பவனை பொறூத்தே நாட்டின் வளர்ச்சி இருக்க்ம்..நாட்டின் வளர்சியை பொறுத்தே நாம் செல்லும் வெளிநாடுகளில் நமக்கு மரியாதை இருக்கும். இதையெல்லாம் விட என் தேசத்தயும் என்னையும் ஆள்கிறவன் திறமையானவனாக இருக்க வேண்டும் என்கிற நினைப்புதான் என்னை அரசியல் பேச வைக்கிறது. பாமரன் அவனை ஆள்வதற்கு ஒரு சாரயவியாபாரி மற்றும் கட்டப்பசாயத்துக்காரன் போதும் என்று நினைத்து அது மாதிரியான ஆட்களை தேர்ந்தேடுத்து அரசியல்வாதியாக்கி வைத்திருக்கிறான்..தன்னை ஆள்பவனை தேர்ந்தேடுக்க வேண்டும் என்கிற ஒரு சொரனை ஒரு பாமரனுக்கு இருக்கும் போது படித்த முட்டாள்களுக்கு இல்லாமல் போனது வெட்கம்!!!. எவன் ஆண்டால் என்ன? எனக்கென்ன லாபம் என்று கேள்வி வேறு!!
மோடிக்கு USA விசா மறுக்கப்படதன் காரணம் குசராத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டது என்கிற காரணத்திற்காகவே. நாளை மோடி மாதிரியான் ஆட்கள் இந்தியாவை ஆளும் போது இந்தியாவே குசராத் தாக மாறும் ..படித்தவன் படிக்காதவன் என்கிற வேறுபாடு இன்றி கலவரத்தில் கொல்லப்படுவீர்கள்.இன்று நாம் வெளிநாடுகளில் பாதுகாப்பாக இருக்கலாம் ஆனால் நம் பெரும்பாலன சொந்தங்கள் இந்தியாவில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன் என்பதை நினைவில் வைத்து ,நம்மை ஆள்பவனை தேர்ந்தேடுக்க வேண்டியது நம் கடமை.

உருவாகட்டும் புதிய இந்தியா ,ஒழிந்து போகட்டும் இந்த போலி கலாச்சாரங்கள் மற்றும் இந்த போலித்தனங்கள்.

Thursday, December 13, 2007

அரசியலை விட்டே விலகுகிறேன்!!!!!!! நாடக சவடால்களின் நாயகர்கள்!!!!

Dr.ராமதாஸ் மற்றும் வைகோ இவர்கள் விடும் சவால்களை பார்த்து அவர்கள் கட்சிக்காரர்களே சிரிப்பார்கள்..

100 ஆண்டுகாளாக பயன்படாதா நிலத்தை வாங்கினேன் என்றார் ராமதாஸ்.

அவர் வாங்கியதாக சொல்லிய நிலம் NH-45 ஒரத்திலிருக்கிறது.

அதன் பயன்பாடுகளை 1995-1999 வரை பார்த்திருக்கிறேன்...Dr. சொல்வதை பார்த்து சிரிப்புத்தான் வருகிறது.

ஒரு சாதீய கட்சித்தலைவனால் இப்படித்தான் உணர்ச்சிவசப்பட முடியும்....

இஸ்லாமியடமிரூந்து வாங்கினேன் என்று மதத்தை இழுக்கிறார்....

வன்னியர்களின் கல்விக்கோயிலை ஆழிக்க முயற்ச்சி என்று சாதீயைஇழுக்கிறார்.. தைலாபுரம் தோட்டத்தில் கோயிலை அமைக்கலாமே என்றால்...உட்னே விவசாயா நிலம் என்று குதிப்பார்...... மரம் வெட்டித் தள்ளினார்கள் அதை கேட்டால் அது ஒரு சமுகத்தின் விடுதலைப் போராட்டம் என்று சாதியம் பேசுவார்...

விசயகாந்த் கட்சி சேலத்திலும் தர்மபுரியிலும் வளர்ந்தால் உடனே தமிழ் சினிமாவை சாடுவார்..தமிழ் மொழிப்பற்று, Dr க்கு அவர் மகன் Dr.Anbumani ஏற்ற்காடு கான்வெண்டில் படித்த போதெல்லாம் வராது..

குற்றப்பிண்னனி உள்ளவர்களை கட்ச்சியில் இருந்து நீக்குவேன் என்கிறார்....திண்டிவனத்தில் சட்டமன்ற தேர்தலில் தோற்று, பிறகு செயித்த MLA வை கொலை செய்ய நடந்த கலவரத்தை நடத்தியது யார்?

பாண்டிச்சேரியில் ஆட்சி என்றார் , மக்கள் மரண அடிகொடுத்தார்கள்...
சொந்தா ஊர் திண்டிவனத்தில் மண்ணைக் கவ்வினார்.....

விருதாசலம் விரட்டி அடித்தது........... கண்டிப்பாக 2011 ல் பாமாக ஆட்சிதான் Dr. அவர்களே ..கனவு காண்பது அவரவர்களின் உரிமை..

இன்று பல கல்லூரிகள் ஏரி நிலத்தில்தான் இருக்கிறது... பல பயன் பாடுகளுக்கு விவசாய நிலத்தை எடுக்க வேண்டியதாகத்தான் இருக்கிறது..

காலத்தின் கட்டாயம் எனவே Dr. அவர்களே உங்கள் சவால்கள் சிர்ப்பைத்தான் வரவழைக்கின்றன...

சாதீக் கட்சிகளின் நாடளூம் ஆசை ஆரோக்கியமானதா என்று எனக்கு புரியவில்லை...

Tuesday, October 02, 2007

ஏன்?

சில பதிவுகளில் நான் பார்த்து சிரித்த புலம்பல்கள்

பந்த் தால் எனக்கு ஒரு பயனும் இல்லை, சேது சமுத்திர திட்டம் வந்தாலும் வராவிட்டாலும் எனக்கு ஒரு இலாபமும் இல்லை என்று ஒருவர் புலம்பியிருந்தார் மற்றும் பந்தால் அவர் தொழில் கடும் பாதிப்பாம்..

100 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒவ்வொருவனும் தனக்கு தனிப்பட்ட பயன் இருந்தால் மட்டுமே அரசின் திட்டங்களை ஒத்துக்கொள்வேன் என்று சொல்வது நகைப்புக்குரியது.

ஈரோட்டுக் கிழவன் தனக்கு சொந்தமான தென்னை மரங்களை யாருக்காக வெட்டினார்? அவருக்கு தொழில் பாதிப்பு இல்லையா?


கடவுள் கல்லை செருப்பால் அடித்தால்தான் தமிழ்நாட்டில் ஒட்டு வாங்க முடியும் என்கிற உண்மையை ஒவ்வொரு தமிழனும் வட நாட்டின் அரசியல் வாதிகளிடம் சென்று சொல்லிக்கொண்டிருக்க முடியாது. ராமனை வைத்து விளையாட இது குசராத்தும் அல்ல அயோத்தியும் அல்ல என்பதினை உணர்த்தவே இந்த பந்த்.

தமிழ்நாடே சேது திட்டத்தை ஆதரிக்கிறது என்பதை BJP உணரும்போது, 39 M.P seat நாபகம் வரும் ,சேது எதிர்பின் வலிமையும் குறையும். தனிப்பட்டவர்களின் வியாபார புலம்பல்கள் இங்கு எடுபடாது.


இன்னுமொரு புலம்பல்,

கருணாநிதி யின் தயவில் தான் மத்திய அரசு, தன் பேரனுக்கு வேண்டியதை போராடி பெற்றுக்கொள்பவர் தமிழ்நாட்டிற்கு வேண்டியதை பெற்று தரவேண்டியதுதானே என்று ஒரு புலம்பல்.

வடநாட்டில் தேர்தல் வர இருக்கிறது. அங்கு பெரியாரிசம் கிடையாது ராமயாணம் தான் எடுபடும். அதனால் காங்கிரஸ் அமைதியாகத்தான் இந்த விசயத்தில் ஈடுபடும். ஆட்சியில் இருந்தால் மட்டுமே அதிகாரம்.இன்னும் ஒரு வருடத்திலோ அதற்கு முன்னரோ தேர்தல் வர இருக்கிறது.ராமரை காட்டி north india வில் BJP செயித்து விட்டால் மத்தியில் அவர்களாட்சி மற்றும் இப்போது கருணாநிதியின் மூலமாக காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தால் வரும் தேர்தலில் யாருடன் திமுக கூட்டனி அமைக்கும்? பிறகு யார் சேது திட்டத்தை நிறைவேற்றுவார்கள்? பிறகு வரும் மத்திய அரசு தமிழ்நாட்டின் குரலுக்கு மதிப்பு கொடுக்குமா?

கருணாநிதி செய்வதுதான் சரி. இந்த பந்த் மத்திய அரசை எதிர்த்து நடத்தப்பட்டது என்று அரசியல் தெரியாதவர்கள் மட்டுமே சொல்லுவர்.

அரசியல் முடிவுகள் என்பது software programming அல்ல உடனே compile செய்து result பார்பதற்கு. இந்தியாவின் அரசியல் ஒரு மாநிலத்தை மட்டுமே சார்ந்தது இல்லை.

ஒரு நடிகை சிரித்தால் உண்மை என்று நம்பும் இந்த உலகம் ஆனால் அவளே அழுதால் ,சும்மா என்னமா நடிகிறா பாருடா என்று சொல்லும் .

இதே கதைதான் அரசியல்வாதிகளுக்கும்.

கருணாநிதி யை கேள்வி கேட்பவர்கள் , செயலலிதாவை ஏன் கேட்பதில்லை?
தமிழ்நாட்டில் பிழைக்க வந்த செயலலலிதா தமிழ்நாட்டின் நலனை எதிர்த்து ராமரின்(இல்லாத ஒருவனின்) நலனுக்காக எதற்கு கோர்ட்டுக்கு போகிறார் என்பதை யாராவது கேட்கலாம்?சேது திட்டம் வந்தாலும் மற்றும் இந்தியா வல்லரசானுலும் எனக்கு ஒரு பயனும் இல்லை .பிறகு ஏன் அரசியல் பேசுகிறேன்? அரசியல் இல்லை என்றால் உலகமே இல்லை. அமெரிக்காவின் எண்ணெய் அரசியலால்தான் ,அமெரிக்கா விலும் வெடிக்கிறது மற்றும் உலகெங்கிலும் வெடிக்கிறது. BJP யின் அரசியலால்தான் குசாராத் எரிந்தது..அரசியலில் நீங்கள் யாரை அனுமதிக்கிறீர்களோ அதன் பொருட்டே உங்களின் வாழ்நாள் நிர்ணயம் செய்யப்படுகிறது.நாளை தமிழ்நாட்டில் BJP ஆட்சிக்கு வந்து கலவரம் நடந்தால் , வெட்டப்படும் தலைகள் அனைத்தும் அரசில்வாதிகளூடையது மட்டும் என்றால் அரசியல் வேண்டாம் என்று இருங்கள் .குறைந்தபட்சம் ஒட்டாவது போடுங்கள் உங்கள் சந்ததிகளுக்காகவது.

Friday, September 28, 2007

அடையாளம்!!!!!!!!!!!!!!!!

"விலங்கிற்கும் ஒளிக்கும் பிறந்தவர்களின் அடையாளம்
உத்தமர்கள்"
" தாய்களின் அடையாளம்
பத்தினிகள்"!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!???????.

"பெயர் தெரியாத மனிதனின் விந்துவிற்கு பிறந்தவர்களின் அடையாளம்
அநாதைகள்"

"தாய்களின் அடையாளம்

விபச்சாரிகள்"!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!???????

Friday, September 21, 2007

கடவுள் நம்பிக்கை???

நபர் 1: சார், நீங்க கடவுளை நம்புகிறீர்களா?

நபர் 2: நிச்சயமாக, பகவான் இல்லாவிட்டால் நாமேது

நபர் 1:சார்,நேற்று என் கனவில் கடவுள் வந்தார்.

நபர் 2: பலே..பலே.நீங்கள் புண்ணியம் செய்தவர்
நபர் 1:கடவுள் ,உங்களிடம் கடனாக ஒரு 50000US$ டாலர் வாங்கிக்கா சொன்னார்

நபர் 2:எத்தனை மணிக்கு உன் கனவில் வந்தார்.?
நபர் 1: ஒரு 2 மணி அளவில்
நபர் 2: ஒ அப்படியா .இதுல பாருங்கோ,பகவான் 2.10 க்கு என் கனவில் வந்து உங்களுக்கு பணம் எதுவும் கொடுக்க வேண்டாம்னுட்டார்..

நபர் 1: அடிச்சாண்டா அந்தர் பல்டி..

நீதி:
பணத்திற்கு முன் பக்தி பறக்கும். பக்தியின் வழியேயும் பணம் கொழிக்கும்(சாய்பாபா..etc)

Thursday, September 20, 2007

சந்திராயனா பிராஜக்ட் டிராப்

நிலவுக்கு விண்கலம் அனுப்புவது பற்றி சந்திரபகவான் கருத்து..

சந்திர பகவான் தன்னுடைய ராஜ்ஜியத்தில் அந்நிய சக்திகள் காலடி எடுத்து வைப்பதற்கு கடும் ஆட்சேபம் தெரிவிப்பதாக வட இந்திய தேவதூதர்களான அத்வானி, தொகடியா...etc..மற்றும் தென்னிந்திய புரட்சித்தலைவி ISRO விற்கு செய்தி அனுப்பி இருக்கிறாகள் மற்றும் அடிக்கடி செயற்கைகோள்களள ஏவி தங்களுடைய வான் வழித்தடங்களில் traffic செய்வதனால் இனிமேல் செயற்கைகோள் முயற்சிகளையும் கைவிடும்படி சந்திரபகவான் கட்டளை பிறப்பித்து இருகப்பதாகவும் கூறுகிறார்கள். பாவங்கள் பல செய்து நரகத்தில் எண்னெய் சட்டியில் வாடிவதங்கி கொண்டிருக்கும் பெரியாரை மேலும் வதக்க sunflower oil 10 litere புஷ்பக விமானதில் அனுப்பி வைக்குமாறும் கேட்டதாக தேவதூதர்கள் தெரிவித்தார்கள் மேலும் ராமர் பாலத்தில் maintance work செய்வதற்காக 1000 கோடி ரூபாயை புரட்சித்தலைவியின் பாதகமலங்களிம் சமர்பிக்க வேண்டும் என்றும் கூறுவதாக செய்தி.


சோனியா அவர்கள் கிறித்துவர் என்பதனால் அவரின் கடவுளை dinner க்கு அழைத்து ராமர் பேச முடிவு செய்து இருக்கிறார்.

பூமாதேவியை புண்படுத்தும் விதமாக நடைபெறும் பாலங்கள் மற்றும் பல கட்டிட வேலைகளை உடனே நிறுத்துமாறும் பூமாதேவி பரட்சித்தலைவியை தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையும் நம்பும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

நான் எல்லோரையும் போல் இது பார்பன சதி என்று கூற வெட்கப்படுகிறேன்..அவர்களுடைய தொழிலைத்தான்(மூட நம்பிக்கைகளை) செய்கிறார்கள்.

திராவிட மந்தைக் கூட்டங்களே ஆண்மீக பெத்தடினை குறைத்துக் கொள்ளுங்கள்

ராமாயணம்(வால்மீகியுடைய ஹாரிபாட்டர்) ஒரு புரட்டு அதிலும் கடவுள் என்பது அதனிலும் புரட்டு.

சும்மா ஒரு வீடியோ...

.


Wednesday, September 05, 2007

Tuesday, September 04, 2007

மறுபடியுமா...!!!!!!!!

http://tvpravi.blogspot.com/2007/09/blog-post_04.html

http://tvpravi.blogspot.com/2007/09/blog-post_05.html

////நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தால் டூண்டு போன்றதொரு பதிவுக்கு லிங்க் கொடுத்து அதனை தன்னுடைய பதிவிலும் வைத்திருப்பாரா இவர் ? டூண்டு பதிவு டீசண்டாக இருக்கிறது போலும் அவரது பார்வைக்கு.... /// போலியின் வலைப்பதிவுக்கு link கொடுத்திருப்பதனால் நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன் இல்லையாம் சொல்கிறார் ரவி. என்னைப் பற்றிய ஒரு தகவல் அதில் இருந்ததனால் அந்த பதிவுக்கு link கொடுத்து இருக்கிறேன். email மூலம் குலாவிக்கொண்ட்டிருந்த ரவி அவர்களே இதை சொல்லும் முன்பு குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது யோசித்திருக்கலாம்...சரி விடுங்க அதையெல்லாம் உங்ககிட்ட எதிர்பார்க்க முடியாது.

//அப்போது தமிழ்மணம் தரன் பதிவை நீக்கியது...அதற்கு கோபித்துக்கொண்டு வனவாசம் போனவர், இப்போது மீண்டும் ஓடிவந்துவிட்டார்...காரணம் இதை விட்டால் அவருக்கேது வேறு வாய்ப்பு...(ஆப்பு) ///

நான் என்னை நிரந்தரமாக நீக்க சொல்லி மடல் அனுப்பி பல மாத்ங்கள் ஆகீவிட்டது. அந்த email பதிவில் என்னைப்பற்றி இருந்ததனால் மட்டுமே பதிவை இட்டேன். ...///

காரணம் இதை விட்டால் அவருக்கேது வேறு வாய்ப்பு...(ஆப்பு) ///

சிரிப்பை பதிலாக்குகிறேன். hahah ahhahahhahhahhahahhahaha...hhahhahhahha...சரிங்க சார்.

///ஏன் மூர்த்தியுடன் ( அதாவது போலி டோண்டுவுடன் / விடாது கருப்புடன்) மடல் தொடர்பு வைத்திருந்தேன் என்று ஏற்கனவே விளக்கிவிட்டேன்.... //

எதற்க்காக போலிடோண்டுவின் பெயரை பயன்படுத்தி எனக்கு மிரட்டல் விடுத்தாரம் இந்த 007. பொய் சொல்லுங்கப்பா ..பொருத்தமா சொல்லுங்கப்பா...hahhaahhahhahahhahahahahahahahahahah.... அடச்சே....எத்தனை முறைதான் இதை சொல்றாதோ...... ஒரு குருவிடம் ஒரு சீடன் இவ்வாறாக கேட்டான்குருவே உங்களை ஒருவர் தாறுமாறாக திட்டீ செல்கிறார் நீங்கள் எதுவுமே பேசாமல் இருக்கீறீர்களே என்று. உடனே குரு ..சீடன் தன்னிடம் கொடுக்க இருந்த பழத்தை வாங்கி தன் கையில் எடுத்துக் கொண்டு இவ்வாறாக சொன்னார் சீடனே.ஒரு நிமிடத்திற்கு முன்பு பழம் உன்னுடையாய் இருந்தது. அதை நீ என்னிடம் கொடுத்தாய்..நீ கொடுக்க நினைபதாலேயே அது எனக்கானது என்று அர்த்தமல்ல..நான் அதனை மனமுவந்து ஏற்றுக்கொண்டதனால் அது என்னை சேர்ந்து இல்லாவிடில் அது உனக்கே சொந்தம், அது போலத்தான் அந்த மனிதர் சொன்ன வார்த்தைகளை நான் ஏற்றுக்கொள்ளவில்லை..இப்போது சொல் நான் ஏன் ,நானே ஏற்றுக்கொள்ளாததாற்கும் எனக்கு சொந்தமில்லாத வார்த்தைகளுக்காகவும்ம் கோபப்படவேண்டும் என்றார்.....என் வாழ்க்கை பாதையின் கையெடுகளில் நான் இந்த கதையை பதிந்து வைத்திருக்கிறேன்.

///நான் யார் - எப்படிப்பட்டவன் என்று.... அரிப்பெடுத்த இழிபிறவி தரனோ, அல்லது போலி டோண்டு மூர்த்தியோ வந்து சொல்லி அவர்கள் தெரிந்துகொள்ளப்போவதில்லை...///

சரிங்க சார்.. நீங்க மேலான பிறவி...hah ha ha ha ha ha haaha ha aha ah aha.

///செந்தழல் ரவி said... தரன்,குச்சிக்காரி மகனே என்று திட்டுபவர் யார் என்று ஊருக்கே தெரியும்போது உங்களுக்கு தெரியாமல் போய் அது நான் தான் என்று நீங்கள் நினைத்துவிட்டது யார் செய்த செய்வினையோ !!!!வளமுடன் வாழ்க 6:06 AM ///


Dharan said... ///செந்தழல் ரவி said... தரன்,குச்சிக்காரி மகனே என்று திட்டுபவர் யார் என்று ஊருக்கே தெரியும்போது உங்களுக்கு தெரியாமல் போய் அது நான் தான் என்று நீங்கள் நினைத்துவிட்டது யார் செய்த செய்வினையோ !!!!வளமுடன் வாழ்க////

தங்களின் மேலான கவனத்திற்குhttp://doondu.googlepages.com/ravi6.JPG

தவறை ஒப்புக்கொள்வது கூட நேர்மைதான்...அதை நான் உங்களிடம் எதிர்பார்த்து இந்த பதிவை எழுதவில்லை....

//நான் தான் என்று நீங்கள் நினைத்துவிட்டது யார் செய்த செய்வினையோ !!!!///

Group politics செய்வது என் வேலையல்ல.

///நான் யார் - எப்படிப்பட்டவன் என்று.... அரிப்பெடுத்த இழிபிறவி தரனோ, அல்லது போலி டோண்டு மூர்த்தியோ வந்து சொல்லி அவர்கள் தெரிந்துகொள்ளப்போவதில்லை...///

http://tvpravi.blogspot.com/2007/09/blog-post_04.html

இழிவான பிறவி என்று ஒரு பிரிவினரை பிராமணண் அன்று சோன்னான். ..நீங்கள் எல்லாம் நியாயம் பேசுவது வேடிக்கை மட்டுமல்ல வாடிக்க்கையும் கூட..ஒருவாரை மோசமானவர் என்றோ நல்லவர் என்றோ தீர்ப்பு கூற எந்த மனிதனுக்கும் அருகதை கிடையாது.என்னிடம் நீங்கள் நடந்து கொண்ட முறையை உலகிற்கு சொன்னேன், அதுவ்வும் கூட நான் எந்த 007 வெட்டி வேலையையும் செய்யவில்லை அதை கண்டுபிடிக்க..உங்கள் குரூப் பாலிடிக்ஸ்ஸின் விளைவில் வெளிவந்து தற்செய்யலாக என் கண்ணில் பட்டது.அவ்வளவே..உங்களைப் பற்றி வந்த மிக மோசமான பின்னுட்டங்கள் எதையும் வெளியிடவில்லை.. இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண.......................... படிப்பை கூடுமானளவு வாழ்க்கையிலும் பயன்படுத்த முயற்சிக்றேன்..

///நான் போலி டோண்டு மூர்த்தியின் பெயரை பயன்படுத்தி இவருக்கு மிரட்டல் விடுத்ததாக சிறுபிள்ளைத்தனமாக புலம்புவது கேவலமாக இருக்கிறது...அப்படி நான் மிரட்டல் விடுத்ததற்கான ஆதாரமோ, மின்னஞ்சலோ, ஐ.பி தகவலோ காட்டினால் வலையுலகை விட்டு விலக...ச்சே...வலையுலகில் இதுபோன்ற பதிவுகளை இடுவதை நிறுத்திக்கொள்கிறேன்... ////

http://doondu.googlepages.com/ravi6.JPG

என்னிடம் நீங்கள் நடந்து கொண்ட முறையை உலகிற்கு சொன்னேன், அதுவ்வும் கூட நான் எந்த 007 வெட்டி வேலையையும் செய்யவில்லை அதை கண்டுபிடிக்க..உங்கள் குரூப் பாலிடிக்ஸ்ஸின் விளைவில் வெளிவந்து தற்செய்யலாக என் கண்ணில் பட்டது.

//இருப்பதே சாக்கடையில்...இனிமேல் எப்படி விழமுடியும்...? ஆராய்ச்சி படிப்புக்கு போனவருக்கு தமிழ்மணத்தில் யார் யாரை சொறிவது என்று மட்டும் நினைவில் இருந்தால் எல்லாம் ஆப்பில் முடிந்துவிடபோகிறது..//

இருந்தாலும் உங்களுக்கு star பதிவர் பட்டம் கொடுத்த
thamizmanam த்தை இப்படியா சொல்வது.....


///முறையான கல்வி கற்று வாழ்க்கையின் பல கட்டங்களை தாண்டிவந்த எவரும் இணையத்தில் மறந்தும் கூட உபயோகப்படுத்த நினைக்கும் வார்த்தைகளை நான் எப்படி உபயோகப்படுத்துவேன் ?///

வார்த்தைகளின் வீரியம் என்பது அவரவரின் குடும்ப சமூக வளர்ப்பை பொறுத்து மாறுபடும்..

"மயிறு" என்று திட்டும் வார்த்தையே என் வீட்டில் அநாகரீகமாக பார்க்கப்படும்...

உங்களுக்கு " நாதாரி" "இழிபிறவி" "அரிப்பெடுத்தவன்"..etc...இதெல்லாம் சாதாரணம்...எனக்கு அப்படியல்ல ..""தெவடியா பையன்" என்று சொல்ல்லும் ஒருவனையும் மேலே நீங்கள் சொல்லும் வார்த்தைகள்ளையும் ஒரே மாதிரிதான் நான் பார்க்கிறேன் எனினும் உளவியல் ரீதியான தாக்குதல்களுக்கு உணர்ச்சிவப்ப்படுபவன் நானல்ல.. பிறகு எதற்கு இந்த பதிவு என்கிறீர்களா? என்னிடம் நீங்கள் நடந்து கொண்ட முறையை உலகிற்கு சொன்னேன் உணர்ச்சிவசப்பட்டு அல்ல....நீங்கள் எல்லாம் நீதிமான்களா என்கிற அர்த்தத்தில் எழுதிய பதிவு அது.


http://manamay.blogspot.com/2007/09/hahhahahhahah.html

என்னுடைய இந்த பதிவிற்கு ரவியைப் பற்றி வந்த குறை சொல்லும் பின்னுட்டங்களையும் நிறுத்திவைத்திருக்கிறேன் காரணம் தண்டிக்க முடியாத குற்றங்களையோ மன்னிக்க முடியாத குற்றங்களையோ ஆராய்வது வீண் என்கிற கருத்தில் நம்பிக்கையுள்ளவன் நான்.


நான் நிறுத்து பல மணி நேரங்களாகிறது,,,,மறுபடியுமா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


"இன்னா செய்தாரை ஒருத்தல்.............................."

Monday, September 03, 2007

அப்படியா......!!!!!!!!!!!!!!!!!!!

http://tvpravi.blogspot.com/2007/09/blog-post_04.html
////நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தால் டூண்டு போன்றதொரு பதிவுக்கு லிங்க் கொடுத்து அதனை தன்னுடைய பதிவிலும் வைத்திருப்பாரா இவர் ? டூண்டு பதிவு டீசண்டாக இருக்கிறது போலும் அவரது பார்வைக்கு.... ///

போலியின் வலைப்பதிவுக்கு link கொடுத்திருப்பதனால் நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன் இல்லையாம் சொல்கிறார் ரவி. என்னைப் பற்றிய ஒரு தகவல் அதில் இருந்ததனால் அந்த பதிவுக்கு link கொடுத்து இருக்கிறேன். email மூலம் குலாவிக்கொண்ட்டிருந்த ரவி அவர்களே இதை சொல்லும் முன்பு குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது யோசித்திருக்கலாம்...சரி விடுங்க அதையெல்லாம் உங்ககிட்ட எதிர்பார்க்க முடியாது.

//அப்போது தமிழ்மணம் தரன் பதிவை நீக்கியது...அதற்கு கோபித்துக்கொண்டு வனவாசம் போனவர், இப்போது மீண்டும் ஓடிவந்துவிட்டார்...காரணம் இதை விட்டால் அவருக்கேது வேறு வாய்ப்பு...(ஆப்பு) ///

நான் என்னை நிரந்தரமாக நீக்க சொல்லி மடல் அனுப்பி பல மாத்ங்கள் ஆகீவிட்டது. அந்த email பதிவில் என்னைப்பற்றி இருந்ததனால் மட்டுமே பதிவை இட்டேன்.

...///காரணம் இதை விட்டால் அவருக்கேது வேறு வாய்ப்பு...(ஆப்பு) ///

சிரிப்பை பதிலாக்குகிறேன். hahah ahhahahhahhahhahahhahaha...hhahhahhahha...சரிங்க சார்.

///ஏன் மூர்த்தியுடன் ( அதாவது போலி டோண்டுவுடன் / விடாது கருப்புடன்) மடல் தொடர்பு வைத்திருந்தேன் என்று ஏற்கனவே விளக்கிவிட்டேன்.... //

எதற்க்காக போலிடோண்டுவின் பெயரை பயன்படுத்தி எனக்கு மிரட்டல் விடுத்தாரம் இந்த 007. பொய் சொல்லுங்கப்பா ..பொருத்தமா சொல்லுங்கப்பா...hahhaahhahhahahhahahahahahahahahahah....

அடச்சே....எத்தனை முறைதான் இதை சொல்றாதோ......
ஒரு குருவிடம் ஒரு சீடன் இவ்வாறாக கேட்டான்குருவே உங்களை ஒருவர் தாறுமாறாக திட்டீ செல்கிறார் நீங்கள் எதுவுமே பேசாமல் இருக்கீறீர்களே என்று. உடனே குரு ..சீடன் தன்னிடம் கொடுக்க இருந்த பழத்தை வாங்கி தன் கையில் எடுத்துக் கொண்டு இவ்வாறாக சொன்னார் சீடனே.ஒரு நிமிடத்திற்கு முன்பு பழம் உன்னுடையாய் இருந்தது. அதை நீ என்னிடம் கொடுத்தாய்..நீ கொடுக்க நினைபதாலேயே அது எனக்கானது என்று அர்த்தமல்ல..நான் அதனை மனமுவந்து ஏற்றுக்கொண்டதனால் அது என்னை சேர்ந்து இல்லாவிடில் அது உனக்கே சொந்தம், அது போலத்தான் அந்த மனிதர் சொன்ன வார்த்தைகளை நான் ஏற்றுக்கொள்ளவில்லை..இப்போது சொல் நான் ஏன் ,நானே ஏற்றுக்கொள்ளாததாற்கும் எனக்கு சொந்தமில்லாத வார்த்தைகளுக்காகவும்ம் கோபப்படவேண்டும் என்றார்.....என் வாழ்க்கை பாதையின் கையெடுகளில் நான் இந்த கதையை பதிந்து வைத்திருக்கிறேன்.


///நான் யார் - எப்படிப்பட்டவன் என்று.... அரிப்பெடுத்த இழிபிறவி தரனோ, அல்லது போலி டோண்டு மூர்த்தியோ வந்து சொல்லி அவர்கள் தெரிந்துகொள்ளப்போவதில்லை...///


சரிங்க சார்.. நீங்க மேலான பிறவி...hah ha ha ha ha ha haaha ha aha ah aha.

///செந்தழல் ரவி said...
தரன்,குச்சிக்காரி மகனே என்று திட்டுபவர் யார் என்று ஊருக்கே தெரியும்போது உங்களுக்கு தெரியாமல் போய் அது நான் தான் என்று நீங்கள் நினைத்துவிட்டது யார் செய்த செய்வினையோ !!!!வளமுடன் வாழ்க
6:06 AM ///Dharan said...
///செந்தழல் ரவி said... தரன்,குச்சிக்காரி மகனே என்று திட்டுபவர் யார் என்று ஊருக்கே தெரியும்போது உங்களுக்கு தெரியாமல் போய் அது நான் தான் என்று நீங்கள் நினைத்துவிட்டது யார் செய்த செய்வினையோ !!!!வளமுடன் வாழ்க////

தங்களின் மேலான கவனத்திற்குhttp://doondu.googlepages.com/ravi6.JPGதவறை ஒப்புக்கொள்வது கூட நேர்மைதான்...அதை நான் உங்களிடம் எதிர்பார்த்து இந்த பதிவை எழுதவில்லை....


//நான் தான் என்று நீங்கள் நினைத்துவிட்டது யார் செய்த செய்வினையோ !!!!///

Group politics செய்வது என் வேலையல்ல.

///நான் யார் - எப்படிப்பட்டவன் என்று.... அரிப்பெடுத்த இழிபிறவி தரனோ, அல்லது போலி டோண்டு மூர்த்தியோ வந்து சொல்லி அவர்கள் தெரிந்துகொள்ளப்போவதில்லை...///

http://tvpravi.blogspot.com/2007/09/blog-post_04.html

இழிவான பிறவி என்று ஒரு பிரிவினரை பிராமணண் அன்று சோன்னான். ..நீங்கள் எல்லாம் நியாயம் பேசுவது வேடிக்கை மட்டுமல்ல வாடிக்க்கையும் கூட..ஒருவாரை மோசமானவர் என்றோ நல்லவர் என்றோ தீர்ப்பு கூற எந்த மனிதனுக்கும் அருகதை கிடையாது.என்னிடம் நீங்கள் நடந்து கொண்ட முறையை உலகிற்கு சொன்னேன், அதுவ்வும் கூட நான் எந்த 007 வெட்டி வேலையையும் செய்யவில்லை அதை கண்டுபிடிக்க..உங்கள் குரூப் பாலிடிக்ஸ்ஸின் விளைவில் வெளிவந்து தற்செய்யலாக என் கண்ணில் பட்டது.அவ்வளவே..உங்களைப் பற்றி வந்த மிக மோசமான பின்னுட்டங்கள் எதையும் வெளியிடவில்லை..

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண..........................

படிப்பை கூடுமானளவு வாழ்க்கையிலும் பயன்படுத்த முயற்சிக்றேன்..

http://manamay.blogspot.com/2007/09/hahhahahhahah.html

என்னுடைய இந்த பதிவிற்கு ரவியைப் பற்றி வந்த குறை சொல்லும் பின்னுட்டங்களையும் நிறுத்திவைத்திருக்கிறேன் காரணம்

தண்டிக்க முடியாத குற்றங்களையோ மன்னிக்க முடியாத குற்றங்களையோ ஆராய்வது வீண் என்கிற கருத்தில் நம்பிக்கையுள்ளவன் நான்.

இனி இதைப் பற்றி எழுதி சாக்கடையில் விழ நான் தயாரில்லை மற்றும் நேரமும் இல்லை..

பயணத்திற்கு வாழ்த்துகள் ரவி...

ஒரு ஊர்ல

எனக்கும் ரவிக்கும் தனிப்பட்ட விரோதம் என்று ஒரு புண்ணாக்கும்ம் கிடையாது. அவர் மாற்றுக்கருத்து சொல்லும் முறையில் நான் எதிர்பார்க்கும் நாகரீகம் இல்லாத காரணத்தால் அவரை என் பதிவுக்கு வரவேண்டாம் என்று நாகரீகமாகத்தான் சொன்னேன். அதில் வந்தது வினை..குச்சிக்காரி மகனே என்று ஆரம்பித்து பல அர்ச்சனைகள்..haha hahah..

ஒரு குருவிடம் ஒரு சீடன் இவ்வாறாக கேட்டான்

குருவே உங்களை ஒருவர் தாறுமாறாக திட்டீ செல்கிறார் நீங்கள் எதுவுமே பேசாமல் இருக்கீறீர்களே என்று. உடனே குரு ..சீடன் தன்னிடம் கொடுக்க இருந்த பழத்தை வாங்கி தன் கையில் எடுத்துக் கொண்டு இவ்வாறாக சொன்னார் சீடனே.ஒரு நிமிடத்திற்கு முன்பு பழம் உன்னுடையாய் இருந்தது. அதை நீ என்னிடம் கொடுத்தாய்..நீ கொடுக்க நினைபதாலேயே அது எனக்கானது என்று அர்த்தமல்ல..நான் அதனை மனமுவந்து ஏற்றுக்கொண்டதனால் அது என்னை சேர்ந்து இல்லாவிடில் அது உனக்கே சொந்தம், அது போலத்தான் அந்த மனிதர் சொன்ன வார்த்தைகளை நான் ஏற்றுக்கொள்ளவில்லை..இப்போது சொல் நான் ஏன் ,நானே ஏற்றுக்கொள்ளாததாற்கும் எனக்கு சொந்தமில்லாத வார்த்தைகளுக்காகவும்ம் கோபப்படவேண்டும் என்றார்.....

என் வாழ்க்கை பாதையின் கையெடுகளில் நான் இந்த கதையை பதிந்து வைத்திருக்கிறேன்..
இந்த பதிவிற்கு ரவியைப் பற்றிய அநாகரீக பின்னுட்டங்கள் தயவு செய்து இடவேண்டாம்


திடீரென்று இந்த பதிவிற்கு வந்து புரியாமல் விழிப்பவர்களுக்காக இந்த link
http://manamay.blogspot.com/2007/09/hahhahahhahah.html


P.S. தனிமனித தாக்குதலை ஊக்கப்படுத்த எழுதியது அல்ல இந்த பதிவு.. அந்த Email address ரவி அவர்களின் அலுவலக முகவரி என்கிற காரணத்தினாலேயே இங்கு வலையேற்றினேன்...மற்றபடி இந்த mail யை வைத்துதான் அவரை பற்றி தெரிந்து கொள்ளும் அளவிற்கு நான் முட்டாள் இல்லை மற்றும் இந்த உலுத்துப் போன வலையுலக அரசியல் செய்ய ஆவலும் இல்லை அர்த்தமும் இல்லை மற்றும் நேரமும் இல்லை. இது மற்ற்வர்களின் பார்வைக்கான பதிவு அவ்வளவே..

Saturday, September 01, 2007

இது REMIX SONG கிடையாது--கரீபியன் பாப்

கரீபியன் பாப் குரூப் தமிழ் பாடலை பாடும் போது தமிழ் கூட அழகாகத்தான் இருக்கிறது..பின்ன பாடற பொண்ணு செக்ஸியா இருக்குல்ல!!!!!!

Friday, August 31, 2007

Unlock i-Phone -..விரிவான விளக்கத்ட்துடன்

இவர்தான் தல...


George Hotz, 17, has broken the software lock that ties the iPhone to AT&T's service, freeing the hyped cell phone for use on other carriers' wireless networks

Sunday, July 08, 2007

Dr.ராமதாஸின் அரசியல் எதை நோக்கி!!!!!!!

சமீபகாலமாக ஊடகங்களில் தயாநிதி மாறனின் இடத்தை நிரப்புவதில் ஒரு வெற்றியை பெற்றிருக்கிறார் மருத்துவர். கல்வி வியாபாரத்தை பற்றிய அவரது வாதம் மிகச்சரியே...அவருடைய எதிரனியின் BHARATH INSTITUTE OF TECHNOLOGY (DEEMED UNIVERSITY, SEALIUR, TAMBARAM,CHENNAI, ADMIN: Mr. JAKATH RATCHAGAN(VANIYAR)) அட்மிஷன் முறைகளை நேரடியாக குறை கூறாமல், Deemed university அனைத்தும் கொள்ளை கூடாரங்கள் என்கிற உண்மையை சொல்லியிருக்கிறார். அரசியல் பண்னமாதிரியும் ஆச்சு ,மக்கள் நல எதிர்கட்சி status ம் கிடைச்சாச்சு.

தயாநிதிமாறன் டெல்லியில் ஓரங்கட்டப்பட்டவுடன் மகிழ்ந்தவர்களில் மருத்துவர் முதலிடத்தில் இருப்பார். கருணாநிதிக்கு பின்பு தயாநிதிமாறனின் வளர்ச்சி மிக வேகமாக இருக்கும் ஆனால் மருத்துவருக்கு பின்பு அன்புமனியின் வீழ்ச்சிதான் மிக வேகமானதாக இருக்கும்.

2011 ல் பா.மா.க தலைமையில் கூட்டனி ஆட்சி என்பதை நோக்கி மருத்துவரின் பயணம்...Pondicherry நிலைமை மறந்திருக்காது மருத்துவருக்கு. சொந்த ஊர் Tindivanam தந்த பாடத்தை நினைவில் வைத்து பயணத்தினை தொடர்வது நல்லது. காமரசரே தோற்றுப் போன மண்னில், காமராசர் ஆட்சிக் கனவு கானும் காங்கிரசை விட மருத்துவர் மேல்தான்.....

கல்வி வியாபார அரசியலை , கற்பு அரசியல் ஸ்டண்ட் மாதிரி இல்லாமல் கடைசிவரை போராடி சாதிய கட்சி என்கிற அடையாளத்தினை துடைக்க முயலலாம்....கனவு காண்பதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது.

RELIANCE FRESH கடை ஸ்டண்ட் என்னாச்சுன்னு யாராவது சொல்லுங்கப்பா

Wednesday, May 30, 2007

தனி ஒரு மனிதனுக்கு

அதிகார பிச்சைஎன்னத்த சொல்ல
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திட சொன்னார்கள் அன்று.

இருக்கும் கற்களை ஒழித்தாலே போதும் என்று சொல்லியிருப்பாரோஇன்று.

Monday, January 29, 2007
மரம் வளர்போம், மனித உயிர்களை காப்போம்

Saturday, January 20, 2007

பெண்ணூரிமை மற்றும் சமத்துவம்
இந்த புகைப்படத்தை பற்றி என்ன கருத்துகள் திரிக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரியும்.

என் கருத்து இதுதான்...பெரியார் சொன்ன பெண்னுரிமை மற்றும் கருத்து சுதந்திரம் இங்கே கருணாநிதியால் மதிக்கப்பட்டிருக்கிறது.

Saturday, January 13, 2007

India

This film is a journey through emerging India," the fastest growing free market democracy in the world". It celebrates the relentless spirit of the people of India, who through their karma give it a place amongst the leading economic nations of the world.
Conceived and produced by Bharatbala Productions (BBP) for India Band Equity Foundation (IBEF).

Diwali 2004 Japanese girls Dancing for a Indian Tamil Song

Diwali 2004 - Japanese girls and kids performing for a Indian Tamil Song