வேண்டாமே

அந்தந்த நேரத்தில் தோன்றும் உணர்வுகளை பதிவு செய்வதற்காகவே இந்த பிளாக். சனநாயக பண்பிற்காக மட்டுமே பின்னூட்ட பெட்டியை திறந்து வைத்திருக்கிறேன் மற்றபடி பின்னூட்டங்களை நான் கண்டுகொள்வதில்லை எனவே உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்கவேண்டாமே! பதிவுகள் பிடித்தால் மறுபடியும் வாருங்கள் இல்லையேல் குப்பை என்று என்று ஒதுக்கி அடுத்த பிளாக்கைப் பாருங்கள். உலகம் பெரியது. For some posts, no comments.


Sunday, July 08, 2007

Dr.ராமதாஸின் அரசியல் எதை நோக்கி!!!!!!!

சமீபகாலமாக ஊடகங்களில் தயாநிதி மாறனின் இடத்தை நிரப்புவதில் ஒரு வெற்றியை பெற்றிருக்கிறார் மருத்துவர். கல்வி வியாபாரத்தை பற்றிய அவரது வாதம் மிகச்சரியே...அவருடைய எதிரனியின் BHARATH INSTITUTE OF TECHNOLOGY (DEEMED UNIVERSITY, SEALIUR, TAMBARAM,CHENNAI, ADMIN: Mr. JAKATH RATCHAGAN(VANIYAR)) அட்மிஷன் முறைகளை நேரடியாக குறை கூறாமல், Deemed university அனைத்தும் கொள்ளை கூடாரங்கள் என்கிற உண்மையை சொல்லியிருக்கிறார். அரசியல் பண்னமாதிரியும் ஆச்சு ,மக்கள் நல எதிர்கட்சி status ம் கிடைச்சாச்சு.

தயாநிதிமாறன் டெல்லியில் ஓரங்கட்டப்பட்டவுடன் மகிழ்ந்தவர்களில் மருத்துவர் முதலிடத்தில் இருப்பார். கருணாநிதிக்கு பின்பு தயாநிதிமாறனின் வளர்ச்சி மிக வேகமாக இருக்கும் ஆனால் மருத்துவருக்கு பின்பு அன்புமனியின் வீழ்ச்சிதான் மிக வேகமானதாக இருக்கும்.

2011 ல் பா.மா.க தலைமையில் கூட்டனி ஆட்சி என்பதை நோக்கி மருத்துவரின் பயணம்...Pondicherry நிலைமை மறந்திருக்காது மருத்துவருக்கு. சொந்த ஊர் Tindivanam தந்த பாடத்தை நினைவில் வைத்து பயணத்தினை தொடர்வது நல்லது. காமரசரே தோற்றுப் போன மண்னில், காமராசர் ஆட்சிக் கனவு கானும் காங்கிரசை விட மருத்துவர் மேல்தான்.....

கல்வி வியாபார அரசியலை , கற்பு அரசியல் ஸ்டண்ட் மாதிரி இல்லாமல் கடைசிவரை போராடி சாதிய கட்சி என்கிற அடையாளத்தினை துடைக்க முயலலாம்....கனவு காண்பதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது.

RELIANCE FRESH கடை ஸ்டண்ட் என்னாச்சுன்னு யாராவது சொல்லுங்கப்பா