வேண்டாமே

அந்தந்த நேரத்தில் தோன்றும் உணர்வுகளை பதிவு செய்வதற்காகவே இந்த பிளாக். சனநாயக பண்பிற்காக மட்டுமே பின்னூட்ட பெட்டியை திறந்து வைத்திருக்கிறேன் மற்றபடி பின்னூட்டங்களை நான் கண்டுகொள்வதில்லை எனவே உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்கவேண்டாமே! பதிவுகள் பிடித்தால் மறுபடியும் வாருங்கள் இல்லையேல் குப்பை என்று என்று ஒதுக்கி அடுத்த பிளாக்கைப் பாருங்கள். உலகம் பெரியது. For some posts, no comments.


Friday, September 21, 2007

கடவுள் நம்பிக்கை???

நபர் 1: சார், நீங்க கடவுளை நம்புகிறீர்களா?

நபர் 2: நிச்சயமாக, பகவான் இல்லாவிட்டால் நாமேது

நபர் 1:சார்,நேற்று என் கனவில் கடவுள் வந்தார்.

நபர் 2: பலே..பலே.நீங்கள் புண்ணியம் செய்தவர்
நபர் 1:கடவுள் ,உங்களிடம் கடனாக ஒரு 50000US$ டாலர் வாங்கிக்கா சொன்னார்

நபர் 2:எத்தனை மணிக்கு உன் கனவில் வந்தார்.?
நபர் 1: ஒரு 2 மணி அளவில்
நபர் 2: ஒ அப்படியா .இதுல பாருங்கோ,பகவான் 2.10 க்கு என் கனவில் வந்து உங்களுக்கு பணம் எதுவும் கொடுக்க வேண்டாம்னுட்டார்..

நபர் 1: அடிச்சாண்டா அந்தர் பல்டி..

நீதி:
பணத்திற்கு முன் பக்தி பறக்கும். பக்தியின் வழியேயும் பணம் கொழிக்கும்(சாய்பாபா..etc)

Thursday, September 20, 2007

சந்திராயனா பிராஜக்ட் டிராப்

நிலவுக்கு விண்கலம் அனுப்புவது பற்றி சந்திரபகவான் கருத்து..

சந்திர பகவான் தன்னுடைய ராஜ்ஜியத்தில் அந்நிய சக்திகள் காலடி எடுத்து வைப்பதற்கு கடும் ஆட்சேபம் தெரிவிப்பதாக வட இந்திய தேவதூதர்களான அத்வானி, தொகடியா...etc..மற்றும் தென்னிந்திய புரட்சித்தலைவி ISRO விற்கு செய்தி அனுப்பி இருக்கிறாகள் மற்றும் அடிக்கடி செயற்கைகோள்களள ஏவி தங்களுடைய வான் வழித்தடங்களில் traffic செய்வதனால் இனிமேல் செயற்கைகோள் முயற்சிகளையும் கைவிடும்படி சந்திரபகவான் கட்டளை பிறப்பித்து இருகப்பதாகவும் கூறுகிறார்கள். பாவங்கள் பல செய்து நரகத்தில் எண்னெய் சட்டியில் வாடிவதங்கி கொண்டிருக்கும் பெரியாரை மேலும் வதக்க sunflower oil 10 litere புஷ்பக விமானதில் அனுப்பி வைக்குமாறும் கேட்டதாக தேவதூதர்கள் தெரிவித்தார்கள் மேலும் ராமர் பாலத்தில் maintance work செய்வதற்காக 1000 கோடி ரூபாயை புரட்சித்தலைவியின் பாதகமலங்களிம் சமர்பிக்க வேண்டும் என்றும் கூறுவதாக செய்தி.


சோனியா அவர்கள் கிறித்துவர் என்பதனால் அவரின் கடவுளை dinner க்கு அழைத்து ராமர் பேச முடிவு செய்து இருக்கிறார்.

பூமாதேவியை புண்படுத்தும் விதமாக நடைபெறும் பாலங்கள் மற்றும் பல கட்டிட வேலைகளை உடனே நிறுத்துமாறும் பூமாதேவி பரட்சித்தலைவியை தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையும் நம்பும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

நான் எல்லோரையும் போல் இது பார்பன சதி என்று கூற வெட்கப்படுகிறேன்..அவர்களுடைய தொழிலைத்தான்(மூட நம்பிக்கைகளை) செய்கிறார்கள்.

திராவிட மந்தைக் கூட்டங்களே ஆண்மீக பெத்தடினை குறைத்துக் கொள்ளுங்கள்

ராமாயணம்(வால்மீகியுடைய ஹாரிபாட்டர்) ஒரு புரட்டு அதிலும் கடவுள் என்பது அதனிலும் புரட்டு.

சும்மா ஒரு வீடியோ...

.