வேண்டாமே

அந்தந்த நேரத்தில் தோன்றும் உணர்வுகளை பதிவு செய்வதற்காகவே இந்த பிளாக். சனநாயக பண்பிற்காக மட்டுமே பின்னூட்ட பெட்டியை திறந்து வைத்திருக்கிறேன் மற்றபடி பின்னூட்டங்களை நான் கண்டுகொள்வதில்லை எனவே உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்கவேண்டாமே! பதிவுகள் பிடித்தால் மறுபடியும் வாருங்கள் இல்லையேல் குப்பை என்று என்று ஒதுக்கி அடுத்த பிளாக்கைப் பாருங்கள். உலகம் பெரியது. For some posts, no comments.


Tuesday, October 02, 2007

ஏன்?

சில பதிவுகளில் நான் பார்த்து சிரித்த புலம்பல்கள்

பந்த் தால் எனக்கு ஒரு பயனும் இல்லை, சேது சமுத்திர திட்டம் வந்தாலும் வராவிட்டாலும் எனக்கு ஒரு இலாபமும் இல்லை என்று ஒருவர் புலம்பியிருந்தார் மற்றும் பந்தால் அவர் தொழில் கடும் பாதிப்பாம்..

100 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒவ்வொருவனும் தனக்கு தனிப்பட்ட பயன் இருந்தால் மட்டுமே அரசின் திட்டங்களை ஒத்துக்கொள்வேன் என்று சொல்வது நகைப்புக்குரியது.

ஈரோட்டுக் கிழவன் தனக்கு சொந்தமான தென்னை மரங்களை யாருக்காக வெட்டினார்? அவருக்கு தொழில் பாதிப்பு இல்லையா?


கடவுள் கல்லை செருப்பால் அடித்தால்தான் தமிழ்நாட்டில் ஒட்டு வாங்க முடியும் என்கிற உண்மையை ஒவ்வொரு தமிழனும் வட நாட்டின் அரசியல் வாதிகளிடம் சென்று சொல்லிக்கொண்டிருக்க முடியாது. ராமனை வைத்து விளையாட இது குசராத்தும் அல்ல அயோத்தியும் அல்ல என்பதினை உணர்த்தவே இந்த பந்த்.

தமிழ்நாடே சேது திட்டத்தை ஆதரிக்கிறது என்பதை BJP உணரும்போது, 39 M.P seat நாபகம் வரும் ,சேது எதிர்பின் வலிமையும் குறையும். தனிப்பட்டவர்களின் வியாபார புலம்பல்கள் இங்கு எடுபடாது.


இன்னுமொரு புலம்பல்,

கருணாநிதி யின் தயவில் தான் மத்திய அரசு, தன் பேரனுக்கு வேண்டியதை போராடி பெற்றுக்கொள்பவர் தமிழ்நாட்டிற்கு வேண்டியதை பெற்று தரவேண்டியதுதானே என்று ஒரு புலம்பல்.

வடநாட்டில் தேர்தல் வர இருக்கிறது. அங்கு பெரியாரிசம் கிடையாது ராமயாணம் தான் எடுபடும். அதனால் காங்கிரஸ் அமைதியாகத்தான் இந்த விசயத்தில் ஈடுபடும். ஆட்சியில் இருந்தால் மட்டுமே அதிகாரம்.இன்னும் ஒரு வருடத்திலோ அதற்கு முன்னரோ தேர்தல் வர இருக்கிறது.ராமரை காட்டி north india வில் BJP செயித்து விட்டால் மத்தியில் அவர்களாட்சி மற்றும் இப்போது கருணாநிதியின் மூலமாக காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தால் வரும் தேர்தலில் யாருடன் திமுக கூட்டனி அமைக்கும்? பிறகு யார் சேது திட்டத்தை நிறைவேற்றுவார்கள்? பிறகு வரும் மத்திய அரசு தமிழ்நாட்டின் குரலுக்கு மதிப்பு கொடுக்குமா?

கருணாநிதி செய்வதுதான் சரி. இந்த பந்த் மத்திய அரசை எதிர்த்து நடத்தப்பட்டது என்று அரசியல் தெரியாதவர்கள் மட்டுமே சொல்லுவர்.

அரசியல் முடிவுகள் என்பது software programming அல்ல உடனே compile செய்து result பார்பதற்கு. இந்தியாவின் அரசியல் ஒரு மாநிலத்தை மட்டுமே சார்ந்தது இல்லை.

ஒரு நடிகை சிரித்தால் உண்மை என்று நம்பும் இந்த உலகம் ஆனால் அவளே அழுதால் ,சும்மா என்னமா நடிகிறா பாருடா என்று சொல்லும் .

இதே கதைதான் அரசியல்வாதிகளுக்கும்.

கருணாநிதி யை கேள்வி கேட்பவர்கள் , செயலலிதாவை ஏன் கேட்பதில்லை?
தமிழ்நாட்டில் பிழைக்க வந்த செயலலலிதா தமிழ்நாட்டின் நலனை எதிர்த்து ராமரின்(இல்லாத ஒருவனின்) நலனுக்காக எதற்கு கோர்ட்டுக்கு போகிறார் என்பதை யாராவது கேட்கலாம்?சேது திட்டம் வந்தாலும் மற்றும் இந்தியா வல்லரசானுலும் எனக்கு ஒரு பயனும் இல்லை .பிறகு ஏன் அரசியல் பேசுகிறேன்? அரசியல் இல்லை என்றால் உலகமே இல்லை. அமெரிக்காவின் எண்ணெய் அரசியலால்தான் ,அமெரிக்கா விலும் வெடிக்கிறது மற்றும் உலகெங்கிலும் வெடிக்கிறது. BJP யின் அரசியலால்தான் குசாராத் எரிந்தது..அரசியலில் நீங்கள் யாரை அனுமதிக்கிறீர்களோ அதன் பொருட்டே உங்களின் வாழ்நாள் நிர்ணயம் செய்யப்படுகிறது.நாளை தமிழ்நாட்டில் BJP ஆட்சிக்கு வந்து கலவரம் நடந்தால் , வெட்டப்படும் தலைகள் அனைத்தும் அரசில்வாதிகளூடையது மட்டும் என்றால் அரசியல் வேண்டாம் என்று இருங்கள் .குறைந்தபட்சம் ஒட்டாவது போடுங்கள் உங்கள் சந்ததிகளுக்காகவது.