வேண்டாமே

அந்தந்த நேரத்தில் தோன்றும் உணர்வுகளை பதிவு செய்வதற்காகவே இந்த பிளாக். சனநாயக பண்பிற்காக மட்டுமே பின்னூட்ட பெட்டியை திறந்து வைத்திருக்கிறேன் மற்றபடி பின்னூட்டங்களை நான் கண்டுகொள்வதில்லை எனவே உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்கவேண்டாமே! பதிவுகள் பிடித்தால் மறுபடியும் வாருங்கள் இல்லையேல் குப்பை என்று என்று ஒதுக்கி அடுத்த பிளாக்கைப் பாருங்கள். உலகம் பெரியது. For some posts, no comments.


Saturday, December 15, 2007

என்று தனியும் எங்களின் ஏக்கங்கள்

நண்பர் ஒசை செல்லா , உங்களுக்கான பதிலை எழுதிவிட்டுப்பார்த்தால் அது மிக நீளமாகி விட்டது எனவே பதிவாகவே போட்டுவிட்டேன். இதில் உங்களுக்கான பதில் முதல் பத்தியிலேயே முடிந்து விட்டது மற்றவைகள் என் ஆதங்கங்களே தவிர உங்களை நோக்கி எழுப்பப்பட்ட கேள்விகள் அல்ல.

///OSAI Chella said... Dear Dharan.. fun apart... I saw it in todays new papers. Yesterday Ramdoss took media ppl to the place and shown them what is there and they interviewd the ones who sold their property to the Trust. They all said.. "ithu Kalar Nilam.. oru mannum vilaiyaathu". Also the encroachment theory also proved a hoax. So think twice!///

ராமதாஸே ஒத்துக் கொண்டிருக்கிறார் .ஒரு குறிப்பிட பகுதியில் விளைநிலமும் மற்றும் அரசு புறம்போக்கு நிலமும் இருந்ததாக. நிலத்தை விற்று காசு வாங்கியவர் ராமதாஸை எதிர்த்து கருத்து சொல்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.அவருடைய நிலம் NH-45 ல் தொழிற்பேடு என்கிற ஊருக்கு அருகில் வரும்..1995 முதல் 1999 வரை தினமும் கல்லூரிக்கு NH-45 வழியாகத்தான் சென்று வந்தோம் ,ஆகையால் ராமதாஸ் மற்றும் வீராசாமி சொல்லித்தான் எங்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்று இல்லை.கடலூரில் 1200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தியது ஏன் என்கிற விளக்கம் வேண்டி ராமதாஸ் போராடுவேயாரானல் அதை ஆதரிபதில் எந்த தயக்கமும் இல்லை அதை விடுத்து வளர்சித்திட்டங்களுக்கு விவசாய நிலம் என்கிற காரணம் கூறி தடை ஏற்படுத்துவேயாரானால் கடும் எதிர்ப்பை அவர் சந்திப்பார்.
என்னமோ இந்தியா விவசாய நாடா இருந்தப்போ எல்லா விவசாயிகளும் BMW கார்ல போனமாதிரியும் இப்போதுதான் எலிக்கரி சாப்பிடுகிற மாதிரியும் பேசுவது வியப்பு!!!
குடிக்கும் தண்ணீருக்கே தட்டுப்பாடு பிறகு எங்கே விவசாயம்..இந்தியாவின் தேசிய ஒருமைப்பாடு பக்கத்து மாநிலம் கூட தண்ணீர் தர மறுக்கிறது.. பிறகெங்கே விவசாயம்..இன்றைய சூழ்நிலையில் ஒரு விவசாயின் பொருளாதார சக்தியை விவசாயதின் வழியாக மேம்படுத்த வழிகள் மிக குறைவே எனவே வேறு வழிகளில் அவனுடைய பொருளாதாரத்தை உயர்த வழி பாருங்கள். எத்தனை விவசாயிகளின் பிள்ளைகள் விவசாயத்தை தொடர்கிறார்கள்???? எந்த ஒரு விவசாயியும் தன் மகம் தன்னை போலவே விவசாயம் பார்க்க வேண்டும் என்று நினைப்பது மிகக்குறைவே..தன் மகனுக்கு படிப்ப வரவில்லை என்றால் அவன் சொல்லும் வார்த்தை..., உன்னையாவது படிக்க வைச்சு நல்ல வேலைக்கு அனுப்பலாம்னு பார்த்தா, நீ படிக்கிற லட்சனைத்தைப் பார்த்தா என்னை மாதிரியே காட்லயும் ,நிலத்துலேயும் கஷ்டப்படுவே போல இருக்கு, என்று தான் செய்யும் தொழிலின் மீது இருக்கும் வெறுப்பு வெளிப்படும்..
வேண்டுமானால் குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்து விவசாயத்தை வாழ வையுங்கள்..
விவசாயம் பார்கிறவன் ஊருக்கு சாப்பாடு போடனும் என்கிற பொது நலத்துக்காகவா விவசாயம் பண்றாண், இல்லை, தன் பொருளாதார வளர்ச்சிக்கான் தொழிலாகத்தான் விவசாயத்தைப் பார்க்கிறான். ஆகவே விவசாயநிலத்தை கையகப்படுத்த கூடாது என்கிற வாதத்தை நான் மட்டுமல்ல பெரும்பாலானவர்கள் ஆதரிப்பதில்லை. முதாளளீத்துவம் வளரும் என்கிற கருத்துகளிலேல்லாம் எனக்கு உடன்பாடு கிடையாது. பார்வையறவனிடம் பிக்காசோ ஒவியம் இருப்பதை விட அதை ஏலத்தில் விட்டு வரும் பணத்தில் அவனுக்க பார்வை வரும் வழியை பார்பது மேல் என்கிற கருத்தை உடையவன் நான்..கம்யுனிசம் ஏழை பணக்காரன் என்கிற வேறுபாடு இருக்கக் கூடாது என்கிறது..நான் ஏழைகளே இருக்க கூடாது அனைவரும் பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன்..எத்தனையோ europea நாடுகளிம் கம்யுனிசம் இல்லை அதற்காக அந்த நாடுகள் என்ன பிச்சையா எடுத்துக் கொண்டிருக்கின்றன?? ஆகையால் விவசாயம் என்கிற ஒரு தொழிலை காரணம் காட்டி நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை தடுக்காதீர்கள் என்பதே என் ஆதங்கம். வெளிநாட்டுக்காரன் invest செய்தால், நாட்டை மறுபடியும் காலனி ஆக்குகிறார்கள் என்கிற கூப்பாடு..சரி உள்நாட்டிக்காரன் invest செய்தால் முதளாளித்துவம் வளர்கிறது என்கிற கூப்பாடு..
சரி ராமதாஸ் விசயத்திற்கு வருவோம்,99% சதவீதம் சரி 1% சதவீதம்தான் தவறு என்று ஒரு விசயம் ஒத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று ராமதாஸ் சொல்வாரானால் என்னால் ஒத்துக்கொள்ள முடியாது.
100% சதவீதம் முழுமை பெற்றால்தான் சரி..அதை விடுத்து 99.99% சரி எனவே ஒத்துக்கொள்ளுங்கள் என்று சொல்வதை ஏற்க முடியாது. இந்தியாவின் வளர்ச்சி தாமதமாவதற்கு காரணமே இது மாதிரியான் 100% சதவீத முழமை பெறாமல் செய்யப்படும் காரியங்களூம் அதன் காரணகர்தாக்களும் தான்.
ஒரு அரசியல்வாதியை தேர்ந்தெடுக்கும் போதும் நாம் பார்ப்பது குறைந்தப்பட்ச நேர்மைதான் ,அதாவது atleast 50% சதவீதம் நல்லவனாய் இருந்தால் போதும் என்கிற மனப்பான்மைதான் இந்த தேசத்தை இன்னும் பிச்சைக்கார நாடாகவே வைத்திருக்கிறது. உடனே சில பேர் சொல்லுவார்கள் அரசியல்வாதிகளில் நல்லவர்களே இல்லை என்று, காமராசர் ஒரு நல்ல அரசியல்வாதிதான்,பிறகு ஏன் இந்த மக்கள் தோற்கடித்தார்கள்..தரம் கெட்ட அரசியல்வாதிகளை வளர்த்து விட்டது யார் குற்றம்? தன்னையும் தன் நாட்டையும் ஆள்கிறவனை தேர்ந்தேடுக்க சோம்பேரித்தனம் காட்டும் பல படித்த முட்டாள்களின் குற்றமே.படித்தவன் அரசியல் பேசுவதே இல்லை ஏனென்றால் அரசியல் பேசினால் பாமரன் என்கிற நினைப்பு. எனக்கு பலமுறை annony ஆக comment வரும்..என்னங்க தரன்,படிச்சவங்க நீங்க ,நீங்க அரசியல் கட்சிகளைப் பற்றி எழுதி ஏன் பாமரத்தனமாக வெளிப்படுகிறீர்கள் என்று. அதற்கு நான் கூறும் ஒரே பதில்..
என் நாட்டை ஆள்பவனை பொறூத்தே நாட்டின் வளர்ச்சி இருக்க்ம்..நாட்டின் வளர்சியை பொறுத்தே நாம் செல்லும் வெளிநாடுகளில் நமக்கு மரியாதை இருக்கும். இதையெல்லாம் விட என் தேசத்தயும் என்னையும் ஆள்கிறவன் திறமையானவனாக இருக்க வேண்டும் என்கிற நினைப்புதான் என்னை அரசியல் பேச வைக்கிறது. பாமரன் அவனை ஆள்வதற்கு ஒரு சாரயவியாபாரி மற்றும் கட்டப்பசாயத்துக்காரன் போதும் என்று நினைத்து அது மாதிரியான ஆட்களை தேர்ந்தேடுத்து அரசியல்வாதியாக்கி வைத்திருக்கிறான்..தன்னை ஆள்பவனை தேர்ந்தேடுக்க வேண்டும் என்கிற ஒரு சொரனை ஒரு பாமரனுக்கு இருக்கும் போது படித்த முட்டாள்களுக்கு இல்லாமல் போனது வெட்கம்!!!. எவன் ஆண்டால் என்ன? எனக்கென்ன லாபம் என்று கேள்வி வேறு!!
மோடிக்கு USA விசா மறுக்கப்படதன் காரணம் குசராத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டது என்கிற காரணத்திற்காகவே. நாளை மோடி மாதிரியான் ஆட்கள் இந்தியாவை ஆளும் போது இந்தியாவே குசராத் தாக மாறும் ..படித்தவன் படிக்காதவன் என்கிற வேறுபாடு இன்றி கலவரத்தில் கொல்லப்படுவீர்கள்.இன்று நாம் வெளிநாடுகளில் பாதுகாப்பாக இருக்கலாம் ஆனால் நம் பெரும்பாலன சொந்தங்கள் இந்தியாவில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன் என்பதை நினைவில் வைத்து ,நம்மை ஆள்பவனை தேர்ந்தேடுக்க வேண்டியது நம் கடமை.

உருவாகட்டும் புதிய இந்தியா ,ஒழிந்து போகட்டும் இந்த போலி கலாச்சாரங்கள் மற்றும் இந்த போலித்தனங்கள்.

Thursday, December 13, 2007

அரசியலை விட்டே விலகுகிறேன்!!!!!!! நாடக சவடால்களின் நாயகர்கள்!!!!

Dr.ராமதாஸ் மற்றும் வைகோ இவர்கள் விடும் சவால்களை பார்த்து அவர்கள் கட்சிக்காரர்களே சிரிப்பார்கள்..

100 ஆண்டுகாளாக பயன்படாதா நிலத்தை வாங்கினேன் என்றார் ராமதாஸ்.

அவர் வாங்கியதாக சொல்லிய நிலம் NH-45 ஒரத்திலிருக்கிறது.

அதன் பயன்பாடுகளை 1995-1999 வரை பார்த்திருக்கிறேன்...Dr. சொல்வதை பார்த்து சிரிப்புத்தான் வருகிறது.

ஒரு சாதீய கட்சித்தலைவனால் இப்படித்தான் உணர்ச்சிவசப்பட முடியும்....

இஸ்லாமியடமிரூந்து வாங்கினேன் என்று மதத்தை இழுக்கிறார்....

வன்னியர்களின் கல்விக்கோயிலை ஆழிக்க முயற்ச்சி என்று சாதீயைஇழுக்கிறார்.. தைலாபுரம் தோட்டத்தில் கோயிலை அமைக்கலாமே என்றால்...உட்னே விவசாயா நிலம் என்று குதிப்பார்...... மரம் வெட்டித் தள்ளினார்கள் அதை கேட்டால் அது ஒரு சமுகத்தின் விடுதலைப் போராட்டம் என்று சாதியம் பேசுவார்...

விசயகாந்த் கட்சி சேலத்திலும் தர்மபுரியிலும் வளர்ந்தால் உடனே தமிழ் சினிமாவை சாடுவார்..தமிழ் மொழிப்பற்று, Dr க்கு அவர் மகன் Dr.Anbumani ஏற்ற்காடு கான்வெண்டில் படித்த போதெல்லாம் வராது..

குற்றப்பிண்னனி உள்ளவர்களை கட்ச்சியில் இருந்து நீக்குவேன் என்கிறார்....திண்டிவனத்தில் சட்டமன்ற தேர்தலில் தோற்று, பிறகு செயித்த MLA வை கொலை செய்ய நடந்த கலவரத்தை நடத்தியது யார்?

பாண்டிச்சேரியில் ஆட்சி என்றார் , மக்கள் மரண அடிகொடுத்தார்கள்...
சொந்தா ஊர் திண்டிவனத்தில் மண்ணைக் கவ்வினார்.....

விருதாசலம் விரட்டி அடித்தது........... கண்டிப்பாக 2011 ல் பாமாக ஆட்சிதான் Dr. அவர்களே ..கனவு காண்பது அவரவர்களின் உரிமை..

இன்று பல கல்லூரிகள் ஏரி நிலத்தில்தான் இருக்கிறது... பல பயன் பாடுகளுக்கு விவசாய நிலத்தை எடுக்க வேண்டியதாகத்தான் இருக்கிறது..

காலத்தின் கட்டாயம் எனவே Dr. அவர்களே உங்கள் சவால்கள் சிர்ப்பைத்தான் வரவழைக்கின்றன...

சாதீக் கட்சிகளின் நாடளூம் ஆசை ஆரோக்கியமானதா என்று எனக்கு புரியவில்லை...