வேண்டாமே

அந்தந்த நேரத்தில் தோன்றும் உணர்வுகளை பதிவு செய்வதற்காகவே இந்த பிளாக். சனநாயக பண்பிற்காக மட்டுமே பின்னூட்ட பெட்டியை திறந்து வைத்திருக்கிறேன் மற்றபடி பின்னூட்டங்களை நான் கண்டுகொள்வதில்லை எனவே உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்கவேண்டாமே! பதிவுகள் பிடித்தால் மறுபடியும் வாருங்கள் இல்லையேல் குப்பை என்று என்று ஒதுக்கி அடுத்த பிளாக்கைப் பாருங்கள். உலகம் பெரியது. For some posts, no comments.


Thursday, July 31, 2008

Director. Bharathiraja-->தசாவதாரம், இந்தப் படத்துல என்னய்யா கதை இருக்கு?-

பொழுதுபோக்கா கதை எழுதிக்கிட்டிருந்தவங்க முழு நேர இயக்குநராக மாறினா எப்படி இருக்கும்? தசாவதாரம் மாதிரிதான் இருக்கும். கதையே இல்லாம, வெறும் தொழில்நுட்பத்தைக் காட்டி மக்களை ஒருவித மயக்கத்தில் ஆழ்த்துவதைத்தான் இப்போதெல்லாம் சினிமா என்கிறார்கள் என்று விமர்சித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.திருச்சூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாரதிராஜா நிருபர்களிடம் கூறியதாவது:

இன்றைக்கு தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நல்ல கதைகளுக்குத்தான் பஞ்சமாக உள்ளது. எக்கச்சக்கமான இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் கதை கிடையாது.

இரண்டு மொழி திரையுலகிலும் இதுதான் நிலைமை.கதையை விட்டு விடுகிறார்கள். தொழில்நுட்பம் என்ற 'ஜிகினா' வேலையை மட்டும் காட்டி மக்களை ஏமாற்றும் கலையைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.இதற்கு மிகச்சிறந்த உதாரணம் தசாவதாரம். இந்தப் படத்துல என்னய்யா கதை இருக்கு... இதே வேலையை வேற எவனாவது செய்திருந்தா பத்திரிகைக்காரங்க நீங்கல்லாம் போட்டுக் கிழிச்சிருக்க மாட்டீங்க... இப்ப என்ன பண்றீங்க... குறிப்பிட்ட நடிகரை (கமல்) குளிர்விப்பதற்காக ஆஹா ஓஹோன்னு எழுதறீங்க!

12ம் நூற்றாண்டில் பெருமாளைக் கடலில் தள்ளிய நிகழ்ச்சிக்கும், 21ம் நூற்றாண்டில் சுனாமி வந்ததற்கும் என்னய்யா சம்பந்தம் என்று கேட்டால், 'பட்டர்பிளை எஃபக்ட்' என கதை சொல்லி ஏமாத்தறாங்க. லாஜிக் இல்லாம சினிமா எடுக்க இப்படியும் ஒரு காரணம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

நான் கமலை திட்டுவதாக எண்ண வேண்டாம். இந்த விமர்சனத்தை அவரிடம் நேரடியாகவே சொன்னவன் நான். அந்த துணிச்சல் எனக்கிருக்கிறது.இப்படி ஒரு நிலை தோன்றக் காரணம் சினிமா என்பது இயக்குனரிகளின் பிடியிலிருந்து நழுவிவிட்டதுதான் என்றார் பாரதிராஜா.

உங்கள் சினிமாவிலும் குறைகள் இருக்கத்தானே செய்கின்றன? என்ற ஒரு நிருபரின் கேள்விக்கு, நான் மக்களைப் பற்றி, அவர்களின் வாழ்க்கையைப் பற்றி, காதலும் இசையும் கலந்த வாழ்க்கையைப் பற்றிப் படமெடுத்தவன். ஒரு சராசரி மனிதனிடம் உள்ள சாதாரண குறைகள் அந்தப் படங்களில் இருப்பதுதான் அந்தக் கதைகளுக்கு அழகு. இல்லாவிட்டால் அவை எதார்த்தத்தை மீறியதாகிவிடும் என்றார் பாரதிராஜா.


Source- Thatstamil.com

Sunday, July 27, 2008

ரோபோ ஸ்டில், கோவி கண்ணனுடையதுதல்ல.கமல் மீது இயக்குனர் சேரன் தாக்கு!!!!!!!!!!

பிரமாண்டம்தான் உலகத் தரமா? என்று இயக்க்குனர் சேரன் கேள்வி??

இது பற்றி சேரனின் பேட்டி

தமிழ்ப் படங்கள் பிரமாண்டமாய் தயாராவதாகவும், அதனால் அவை உலகத் தரத்துக்கு உயர்ந்திருப்பதாகவும் கூறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. வியாபாரம் வேண்டுமானால் உயர்ந்திருக்கலாம். ஆனால் அவற்றையெல்லாம் நல்ல தமிழ்ப் படங்கள் என்று சொல்ல முடியாது. அவை வெறும் பொழுதுபோக்குப் படங்கள்.அவை, உலக அரங்கில் தமிழர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்காதவை. உலகத் தரத்துக்கான தமிழ் படத்துக்கு அவ்வளவு பிரமாண்டம் தேவையில்லை. எளிமையாக இருப்பதுதான் தமிழர்களின் வாழ்க்கை. அதே சமயம் வியாபார யுக்தியில் இவ்வளவு பெரிய வளர்ச்சியை தமிழ் சினிமா அடைந்ததும், அதில் ஜெயித்ததும் பாராட்டத்தக்கது....நீங்கள் இதைப் படித்தூமுடித்தும் மனதில் நினைப்பது..

" இதுல எங்கடா கமலைப் பற்றி பேசியிருக்கார் என்று"

என் பதில்:

அன்னை செயலலிதாவின் சேது சமுத்திர எதிர்பு அறிக்கைகளில் அரசியல் வார்த்தைகள் விளையாடும். அது மாதிரிதான் சும்மா முழங்காலூக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சு நாங்களூம் போடுவம்ல...