
என் ஆடை அவிழ்ந்தபோதெல்லாம் என்னில் ஆடையாக மாறியவளே,
உன் உள்ளம் அவிழ்ந்தபோது உன்னில் நான் அமிழ்ந்துபோகவில்லையடி,
ஆணூறையின் நிறத்தையும் மணத்தையும் கவனமாக தேர்ந்தெடுக்க சொன்னவளே,
உன் மனதின் கனத்தை அளந்தெடுக்க சொல்லவேயில்லையடி நீ!
பல கோணங்களில் புணரக்கற்றுக் கொடுத்த நீ
சில கோணங்களிலாவது மனதினைக் கவரக்கற்றுக் கொடுத்திருக்கலாம்,
நிறைவாக நீ முனகும் காம கதறலை கேட்கத் தெரிந்த என் செவிக்கு
குறைவாக உன் உள்ளம் முனகும் கண்ணீர்க் கதறலை கேட்க மறந்ததேனோ,
எத்தனையோ அனுதாபங்கள் எல்லாமே ஆணுறைகளில்தான் முடிந்திருகின்றது என்கிற இறுமாப்பில் நீயிருக்க,
எத்தனையோ கண்ணீர்க்கதைகள் எல்லாமே கரன்சிகளில் தான் முடிந்திருக்கிறது என்கிற பேரிறுமாப்பில் நானிறுக்க,
நாமிருந்த அறையின் நேரம் முடிந்தேபோனது என் காமத்தை விட வேகமாய்!
0 மிக முக்கியமான கருத்தாக இருந்தாக மட்டும்:
Post a Comment