வேண்டாமே

அந்தந்த நேரத்தில் தோன்றும் உணர்வுகளை பதிவு செய்வதற்காகவே இந்த பிளாக். சனநாயக பண்பிற்காக மட்டுமே பின்னூட்ட பெட்டியை திறந்து வைத்திருக்கிறேன் மற்றபடி பின்னூட்டங்களை நான் கண்டுகொள்வதில்லை எனவே உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்கவேண்டாமே! பதிவுகள் பிடித்தால் மறுபடியும் வாருங்கள் இல்லையேல் குப்பை என்று என்று ஒதுக்கி அடுத்த பிளாக்கைப் பாருங்கள். உலகம் பெரியது. For some posts, no comments.


Saturday, November 19, 2011

காமத்திற்கும் மன(ண)முண்டு


என் ஆடை அவிழ்ந்தபோதெல்லாம் என்னில் ஆடையாக மாறியவளே,

உன் உள்ளம் அவிழ்ந்தபோது உன்னில் நான் அமிழ்ந்துபோகவில்லையடி,

ஆணூறையின் நிறத்தையும் மணத்தையும் கவனமாக தேர்ந்தெடுக்க சொன்னவளே,

உன் மனதின் கன‌த்தை அளந்தெடுக்க சொல்லவேயில்லையடி நீ!

பல கோணங்களில் புணரக்கற்றுக் கொடுத்த நீ

சில கோணங்களிலாவது மனதினைக் கவரக்கற்றுக் கொடுத்திருக்கலாம்,

நிறைவாக நீ முனகும் காம கதறலை கேட்கத் தெரிந்த என் செவிக்கு

குறைவாக உன் உள்ளம் முனகும் கண்ணீர்க் கதறலை கேட்க மறந்ததேனோ,

எத்தனையோ அனுதாபங்கள் எல்லாமே ஆணுறைகளில்தான் முடிந்திருகின்றது என்கிற‌ இறுமாப்பில் நீயிருக்க‌,

எத்தனையோ கண்ணீர்க்கதைகள் எல்லாமே கரன்சிகளில் தான் முடிந்திருக்கிறது என்கிற‌ பேரிறுமாப்பில் நானிறுக்க‌,

நாமிருந்த அறையின் நேரம் முடிந்தேபோனது என் காமத்தை விட வேகமாய்!